பாஜகவுடனாக மோதல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஸ்குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், காங்கிரஸ் ராஸ்ட்ரிய ஜனதா தல கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சித்துணையும் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதில், ராஸ்டிரிய ஜனதாவைச் சேர்ந்தலும், துணை முதல்வருமான தேஜஸ்வி இன்று டில்லிக்குச் சென்று அங்கு, காங்கிரஸ் மிக்கியத்தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பிற்குப் முன், கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா. ஆகியோரையும் சந்தித்து ஆடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டுகோல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.