காங்., தலைவர் சோனியாவுக்கு மீண்டும் கொரோனா!

சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:21 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரொனா தொற்று பாதித்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர்  தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சில நாட்களுக்கு முன் அவர் முதல் முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது, டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று, குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்