திருப்பதியில் உள்ள திருமலையில், ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக பெரும் சர்ச்சை நிலவிய நிலையில், இதுகுறித்து அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட லட்டு விவகாரம் குறித்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தற்போதைய துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட சிலர், திருமலைக்கு பாதயாத்திரையாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30 ஆவது பிரிவு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.