இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி பயன்பாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த தடுப்பூசி விநியோகத்தில் இது 23% ஆகும். இதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 12.10% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.