மாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுப்பிடித்த சிறுவன்

Webdunia
புதன், 11 மே 2016 (21:35 IST)
அடர்ந்த காட்டில் மறைந்திருந்த மாயன்கள் வாழ்ந்த நகரத்தை கனடாவை சேர்ந்த 15 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளார்.


 

 
தென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர்கள் தான் மாயன்கள். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு உலகெங்கிலும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. மாயன்களின் காலண்டர்படி, 2012இல் உலகம் அழியும் என்று கூறப்பட்ட வதந்தியை  உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக எல்லொரும் ஒரு வகையில் நம்பினர்.
 
மாயன்களின் புராதான நகரான 'மச்சுபிச்சு' உலகிலுள்ள அனைவரையும் கவரும் பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.
 
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் ஒளியும் புக முடியாத அடர்ந்த காடுகளின் இடையே மாயன்களின் நகரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதனை கண்டுபிடித்தது கனடாவை சேர்ந்த 15 வயதேயான வில்லியம் கேடோரி . 
 
வில்லியம் கேடோரி செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தினைக் கொண்டு வீட்டில் இருந்தவாறே கண்டுபிடித்துள்ளார். 
 
தென்கிழக்கு மெக்சிகோவின் அடர்ந்த யுகாடன் காடுகளின் செயற்கைக் கோள் வரைபடத்தை ஆராய்ந்த வில்லியம், அதன் இடையே சதுவ வடிவ கட்டுமானம் ஒன்று உள்ளதனை கண்டறிந்து, அதை 3 ஆண்டுகளாக ஆராய்ந்த்து மூலம் உறுதிப்படுத்தப்பட்டது சிறுவன் வில்லியம் தான் கண்டறிந்துள்ள மாயன் நகரத்திற்கு 'நெருப்பு வாய்' என பொருள்படும் வகையில் கே'ஆக் சீ' என பெயரிட்டுள்ளான்.

தனது கண்டுபிடிப்பு குறித்து 2017இல் பிரேசிலில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் உரை நிகழ்த்த உள்ளான். 

வில்லியம் கேடோரி கண்டறிந்துள்ள அமைப்பு மனிதனால் கட்டப்பட்ட ஒன்றாக தான் இருக்க வேண்டுமென கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த டேனியல் டீ லிஸ்லே என்பவரும் கருத்து தெரிவித்துள்ளார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்