மன்மோகன்சிங் வீட்டிற்கு தீ வைக்க முயற்சியா? திடுக்கிடும் தகவல்

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (07:24 IST)
கடந்த 1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு சீக்கியர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டபோது, சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர வன்முறை நிகழ்த்தப்பட்டது. அந்த சமயத்தில் டெல்லியில் மன்மோகன்சிங் அவர்களுக்கு சொந்தமான வீட்டிற்கும் தீ வைக்க முயற்சி நடந்ததாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

மன்மோகன்சிங்\ அவர்களின்  இளைய மகள் தாமன் சிங் என்பவர் எழுதிய' ஸ்டிரிக்ட்லி பர்சனல்' என்ற புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது தனது தந்தை மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்ததாகவும், அவருக்கு சொந்தமாக டெல்லியில் இருந்த வீட்டில் தனது மூத்த சகோதரி உபிந்தர் சிங் மற்றும் அவரது கணவர் விஜய் வசித்து வந்ததாகவும், இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது டெல்லியில் உள்ள பல சீக்கியர்களின் வீடுகள் தீவைக்கப்பட்டபோது தனது சகோதரி இருந்த வீடும் தீவைக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், ஆனால் தனது சகோதரியின் கணவர் அதனை தடுத்துவிட்டதாகவும் அந்த புத்தகத்தில் தாமன் சிங் குறிப்பிடப்பட்டுள்ளார்

மேலும் இந்திரா படுகொலை ஒரு மோசமான விஷயம் தான் என்றாலும் அந்த படுகொலைக்கு பின்னர் நடந்த சம்பவங்கள்  கண்டிப்பாக ஜீரணிக்க முடியாத விஷயம்' என்றும் தாமன்சிங் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்