ஒருநாள் உன்னை எனக்கு தர வேண்டும்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக இயக்குனர்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (14:19 IST)
பெங்களூரு நகரில் செயல்படும் ஹெல்த்கேர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர், அவரது பிறந்தநாளுக்கு பரிசாக நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள பெண்ணை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.  


 

 
பெங்களூரு நகரில் ஜான்(53) என்பவர் ஹெல்த்கேர் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் அவரது கல்லூரி தோழி ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பெண் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்.
 
இவர் அண்மையில் அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்துள்ளார். அதனால் ஜான் மாறும் அவரது தோழி அடிக்கடி வியாபாரம் ரீதியாக வெளி ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது அவர்கள் இருவரும் ஓட்டலில் ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.
 
சிறிது நாட்களில் ஜான் அவரது தோழியிடம் அத்துமீறி நடந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் ஜான் அவரது நண்பர் என்பதால் எச்சரித்துள்ளார்.
 
ஆனால் ஜான், என்னுடன் நீ ஒரு நாள் தங்கி எனது ஆசைக்கு உடன்படவில்லை என்றால் உனக்கு நிறுவனத்தின் பங்குகளை தர மாட்டேன் என்று மிரட்டியுள்ளார்.
 
சமீபத்தில் ஜானுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாள் பரிசாக ஒரு நாள் என்னுடன் தங்கி உன்னை எனக்கு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் ஜான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்