ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்து அவரை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன் பிறகு பிரஷர் குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசியதாக தெரிகிறது.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் காணவில்லை என போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
கைதான நபர் ராணுவ வீரராக இருந்தவர் என்றும், தற்போது காவலராக பணிபுரிந்து வருகிறார் என்றும், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.