மனைவிக்காக சுல்தான் பட அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி அசத்திய அன்பு கணவர்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (13:29 IST)
பாலிவுட் நடிகர் சல்மானகான் நடித்து, சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 


 

 
ஹிமாசலப் பிரேதசத்தை சேர்ந்த சங்கர் முசாஃபிர் என்பவர், கீதாஞ்சலி என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். கீதாஞ்சலி சல்மான்கானின் தீவிர ரசிகை. 
 
சல்மான்கான் குத்துச் சண்டை வீரராக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ‘சுல்தான்’. ஹமிர்பூர் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் அந்த திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. இந்த படத்தை பார்க்க முசாஃபிர், தன்னுடைய மனைவியுடன் திரையரங்குக்கு சென்றார். ஆனால், திரையரங்கில் அவர்களை தவிர யாருமில்லை. இது கீதாஞ்சலிக்கு ஆச்சர்யத்தை அளித்தது. 
 
அதன் பின்னர்தான்,  முசாஃபிர், தன்னை அசத்துவதற்காக அன்றைய காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி விட்டார் என்பது கீதாஞ்சலிக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு சுல்தான் திரைப்படத்தை கண்டு ரசித்தார்.
 
இதுபற்றி அந்த திரையரங்க நிர்வாக இயக்குநர் கூறுகையில், "திரையரங்குக்கு முசாஃபிர் தனது நண்பர்களை அழைத்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தனது மனைவியை மட்டும் அழைத்து வந்து சுல்தான் படத்தை அவர் கண்டு ரசித்தார். அது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். 
அடுத்த கட்டுரையில்