மளிகை பொருட்கள் வாங்க அனுப்பிய தாய்! மருமகளோடு வந்த மகன்!

வெள்ளி, 1 மே 2020 (08:32 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க சென்ற மகன் தனது மனைவியை அழைத்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹூடு. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவரை இவரது தாயார் மளிகை பொருட்களை வாங்கிவர அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் கழித்து வந்த அவர் தன் தாயாரிடமும் உறவினர்களிடம் ஒரு இளம்பெண்ணை அறிமுகப்படுத்தி இவள்தான் உங்கள் மருமகள் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் சான்றிதழ் பெறுவதற்கு தாமதமானதாலும், மனைவியை அண்டை மாநிலத்தில் ஒரு வாடகை வீட்டில் வசிக்க வைத்திருந்ததாகவும் ஹூடு தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரையும் அவரது தாயார் ஏற்க மறுத்துள்ளார்.

போலிஸார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் எட்டப்படாததால் போலிஸார் தம்பதிகளை டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே தங்கிக் கொள்ள கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்