மது குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் செத்துவிடும்: முதல்வருக்கு எம்.எல்.ஏ கடிதம்

வெள்ளி, 1 மே 2020 (08:14 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணத்தால் நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட உள்ளது என்பதும் இதனால் மது பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் பெரும் சிக்கலில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மதுகடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கோட் என்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பரத்சிங் அவர்கள் முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் மது குடிப்பதால் தொண்டையில் உள்ள வைரஸ் அழிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார் 
 
ஆல்கஹால் கலந்து தயாரித்த சானிடைசர்கள் கொண்டு கைகளை கழுவும் போது கைகளில் உள்ள கொரோனா அழியும்போது, ஆல்கஹால் நிறைந்த மதுவைக் குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் அழியாமல் எப்படி இருக்கும் என்றும் அதனால் தொண்டையில் உள்ள வைரஸை அழிப்பதற்கு உதவும் வகையில் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்
 
மேலும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்களின் உயிர்கள் பலியாவது மட்டுமின்றி அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Bharat Singh Kundanpur, Congress MLA from Sangod has written to Rajasthan CM Ashok Gehlot for opening liquor shops in the state. The letter reads, "When #coronavirus can be removed by washing hands with alcohol, then drinking alcohol will surely remove virus from the throat". pic.twitter.com/ToVPomDI1Z

— ANI (@ANI) May 1, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்