விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மதுபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தித் என்பதும் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது மது போதையில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற பகுதியில் இருந்து மங்களூருக்கு சென்ற அரசு பேருந்தில் மது போதையில் பெண் பயணி மீது 32 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழித்துக்காக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிட்டதும் சக பயணிகள் அந்த நபரை கண்டித்து பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்