ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி மாந்திரீகவாதியின் உதவியுடன் 7 மாத குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
படோய் கலிந்தி என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் பாம்பாட்டியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை வரம் இல்லை. இதனால் இவர் கர்மு கலிந்தி என்ற மாந்திரீகவாதியை சந்தித்துள்ளார். அப்போது அந்த மாந்திரீகவாதி பச்சிளம் குழந்தை ஒன்றை நரபலி கொடுத்து இறைவனை குளிர்விக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த மாந்த்ரீகவாதியின் உறவினர் ஒருவரின் 7 மாத பெண் குழந்தையை அந்த நபர் தத்தெடுத்துள்ளார். அதன் பின்னர் தூங்கிக்கொண்டிருந்த பாசிளம் குழந்தையை ஆற்றின் கரையோரம் உயிரோடு புதைத்துள்ளார்.
இதனையடுத்து மாந்த்ரீகவாதி காணாமல் போனதை வைத்து குழந்தை தத்தெடுக்கப்பட்டதில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருத்திய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இருவரும் குழந்தையை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டனர்.