மத்திய பிரதேசத்தில் உள்ள மவுகஞ்ச் மாவட்டத்தில் 62 வயதான ராம்ரதி விஸ்வகர்மா என்பவர் அவரது மனைவி, மகன் மற்றும் பேரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். விசாரணையில் ராம்ரதியின் மருமகள் துர்கா பூஜை பந்தலில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கு ராம்ரதி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த எதிர்ப்பு குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கோபமடைந்த அவரது பேரன் சோனு, ராம்ரதியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். அதன் பிறகு, அவரது மகன் வேத்பிரகாஷ் மற்றும் ராம்ரதியின் மனைவி ஆகியோரும் சேர்ந்து அவரை மர கம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில், 62 வயதான ராம்ரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 62 வயது முதியவரை அவரது குடும்ப உறுப்பினர்களே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.