சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக, தமிழக அரசு ₹1,963.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, தென் மாவட்ட பயணிகளுக்கும், சென்னையின் போக்குவரத்துக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மெட்ரோ ரயில் பாதை சுமார் 15 கி.மீ. நீளம் கொண்டது. இந்த புதிய வழித்தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.இந்தத் திட்டம், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்லும் தென் மாவட்டப் பயணிகளுக்கு ஒரு வசதியான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யும்.