காக்காவுக்கு சோறு வைக்க 50 ரூபாய் கட்டணம்… வித்தியாசமான பிஸ்னஸ் செய்யும் நபர்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:16 IST)
அமாவாசை அன்று உணவு படைத்து காக்காய்க்கு வைத்துவிட்டு பின்பு தாம் உண்ணுவது இந்தியர்களில் ஒரு சிலரின் வழக்கம்.

அம்மாவாசை அன்று வடை பாயாசத்தோடு சமையல் செய்து காக்கைகளை முன்னோர்களாக நினைத்து முதலில் அவற்றுக்கு உணவிட்டு பின்னர் உணவு உன்பது ஒரு வகையான பழக்கமாக உள்ளது. ஆனால் இப்போது நகர்ப்புறங்களில் காக்கைகளை பிடிப்பது சுலபமான காரியமாக இல்லை.

இந்நிலையில் நபர் ஒருவர் காக்கைகளை பிடித்துவைத்துக்கொண்டு அவற்றுக்கு உணவு வைக்க 50 ரூபாய் கட்டணமாக வசூலித்து கல்லா கட்டி வருகிறார். இவரை போன் செய்து அழைத்தாலே சொல்லும் ஏரியாவுக்கு அம்மாவாசை அன்று காக்காவோடு வருவாராம். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்