ஜி-20 சின்னமாக தாமரையா? மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (17:00 IST)
ஜி-20 சின்னமாக தாமரை வடிவமைக்கப்பட்டதற்கு  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
ஜி20 உச்சிமாநாடு மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் இதன் பெருமையை விளக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் கூட்டங்கள் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது
 
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ள நிலையில் இதுகுறித்து அவர் கூறிய போது நமது தேசிய மலர் தாமரை உள்ளது என்றபோதிலும் அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமாகும் 
 
அதனால் ஜி-20 மாநாட்டில் தாமரை என்ற சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் விஐபிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் மக்கள் அதனை மன்னித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குஜராத் தேர்தல் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்