மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பு காவலர் வைத்து இருந்த டார்ச் லைட்டை மைக் என நினைத்து வாங்கி பேசினார். உடனே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் டார்ச் லைட்டை வாங்கிக்கொண்டு மைக்கை நீட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.