மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா தாக்கூருக்கு NIA சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

sinoj

புதன், 3 ஏப்ரல் 2024 (18:58 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும் பாஜக எம்பி., பிரக்யா தாக்கூருக்கு என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில்  பள்ளிவாசல் அருகே பைக்கீல் இருந்த வெடிகுண்டு  வெடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்தததுடன் அங்கிருந்த 100 பேர் காயமடைந்தனர். இவ்வழக்கில் பாஜக எம்.பி., பிரஜ்யா தாக்கூர் ஏ1 ஆக உள்ளார்.
 
இவ்வழக்கு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கி முக்கிய குற்றவாளியாக உல்ல  பாஜக எம்.பி நேரில் ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது.
 
ஆனால், இதுவரை  பாஜக எம்பி., பிரக்யா தாகூர்  நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது விசாரணையை தடுப்பதாக இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்