கவுதம் காம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்!

Sinoj

சனி, 2 மார்ச் 2024 (16:37 IST)
கவுதம் காம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
 இந்த   நிலையில், சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கீதா கோடா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதேபோல் தமிழ் நாட்டில் விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தது, தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
 
இப்படி சில நாட்களாக பாஜகவில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரரும் டில்லி கிழக்கு தொகுது எம்பியுமான கவுதம் காம்பீர்  தீவிர அரசியலில் இருந்து விலகி, கிரிக்கெட் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதனால் அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்க பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநில மக்களவை எம்பி ஜயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகி, கால நிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவில் இருந்து முக்கிய எம்பிக்கள் மற்றும் பிரபலங்கள் விலகுவது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்