கேரளம் மாநிலம் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோயில் கடந்த16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அய்யப்பன் கோயில் மண்டல பூஜை , மகர விளக்கு விழாவையொட்டி, டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மகர விளக்கின் நிகழ்ச்சியாக வரும் 15 ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிறைந்ததை அடுத்து, மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என தெரிகிறது. எனவே இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்த நிலையில் 14, 15 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாகவும், ஸ்பார் புக்கில் 10 ஆயிரமாகவும் சுறுக்கப்பட்டு, ஸ்பாட் புக்கிங் சேவை வரும் 10 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் எனவும் மண்டல பூஜை நிறைவடைந்தவுடன் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.