பீகார் மாநிலத்தில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக 30 ஆண்டுகளாக கால்வாய் வெட்டிய முதியவருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் காயா என்ற கிராமத்தில் லாயுங்கி புய்யான் என்ற நபர் கடந்த 30 ஆண்டுகளாக தங்கள் ஊர் குளத்தில் இருந்து மலைப்பகதியை இணைக்கும் கால்வாய் ஒன்றை தனியாளாக வெட்டியுள்ளார். ஆனால் இந்த முயற்சியில் அவருக்கு ஊர்க்காரர்கள் உதவ யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்போது 3 கி.மீ. தூரத்திற்கு இந்த கால்வாயை வெட்டி சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் இனி அந்த ஊரின் குளங்கள் வருடத்தின் பெரும்பகுதிக்கு நீர் நிரம்பியிருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அந்த ஊரின் கால்நடைகள் எல்லாம் பயன்பெறும் எனவும் சொல்லப்படுகிறது.
இவரைப் பற்றிய செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஒருவர் இவர் தனக்கு ஒரு டிராக்டர் இருந்தாக நன்றாக இருக்கும் என சொல்வதாக கூறி மஹிந்திரா குழுமத்தின் சேர்மேனான ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்திருந்தார். அதையடுத்து இப்போது அவருக்கு மஹிந்தரா நிறுவனம் டிராக்டரை பரிசாக வழங்கியுள்ளது.