மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: மகாராஷ்டிரா அரசு!

வியாழன், 3 மார்ச் 2022 (08:56 IST)
மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா என்றும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த நகரம் மும்பை என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து மும்பை உள்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து மும்பை உள்பட 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இதனை அடுத்து திரையரங்குகள் மால்கள் நீச்சல் குளங்கள் உள்பட அனைத்தும் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்