ஜெட் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் உள்ள கழிவறையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், விமானம் கடத்தப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் உடனே அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.