கை கொடுத்து முத்தம் கொடுத்த மதபோதகரால் 85 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு

வெள்ளி, 12 ஜூன் 2020 (08:12 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு கைகொடுத்து முத்தம் கொடுத்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதோடு அவரால் அந்த பகுதியில் உள்ள பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய பிரதேசம் சார்ந்த மத போதகர் சமீபகாலமாக தன்னிடம் வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் கைகொடுத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய பக்தர்களை தனிமைப்படுத்திய உள்ள மத்திய பிரதேச அரசு, அந்த ஒரு நபரால் சுமார் 85 பேர் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது 
 
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நிலையில் அந்த போதகர் கைகளில் முத்தம் கொடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்