’ஆத்தி’ - 2 நாளில் தோனி படம் எவ்வளவு வசூல் தெரியுமா?

ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (21:56 IST)
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.21.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


 
 
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக வெளியானது. 
 
சுஷாந்த் சிங் ராஜ்புட் என்பவர் தோனியாக நடித்துள்ளார்.
 
தோனி படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 21.30 கோடி வசூல் செய்தது. இந்த ஆண்டு வெளியான படங்களில் சல்மான் கானின் சுல்தான் படம் தான் ரிலீஸான அன்றே அதிகபட்சமாக ரூ.36.54 கோடி வசூல் செய்தது. சுல்தான் படத்தை அடுத்து ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை தோனி படம் பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இப்படம், சனிக்கிழமை ரூ.20.60 கோடி வசூலித்துள்ளது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.41.90 கோடி வசூலாகியுள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் ரூ.60 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்