முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டும் வருகிறது. விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்திருந்த ஒருசில நாடுகள் தடையை விலக்கிய பின்னரும் இந்தியாவில் மட்டும் தடை நீட்டிக்கப்பட்டு வந்ததற்கு ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன
இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகளுக்கான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன என்றும், மத்திய அரசு அந்த தடை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.