மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய விடையை மட்டும் எழுதாமல், அந்த கேள்விக்கு பொருந்தும் வகையில் காதல் கவிதைகளையும் சினிமா பாடல்களையும் எழுதிய பத்து மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டிய நிர்வாகம், இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை செய்தது. அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார் 10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். விடைத்தாளில் கவிதை எழுதியதற்கு ஒரு வருடம் சஸ்பெண்ட் என்பது டூமச் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.