மாணவர்களே ரெடியா! மோடிக்கு கடிதம் எழுதும் போட்டி!

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (07:01 IST)
அஞ்சல் துறை, பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதும் போட்டியை நடத்த உள்ளது.


 
 
இதில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். ’இந்தியாவின் பன்முகத்தன்மையே நமது பலம்’ என்ற தலைப்பில் பிரதமருக்கு மாணவர்கள் கடிதம் எழுதலாம்.
 
இதில், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசு ரூ.800, மூன்றாம் பரிசு ரூ.500. இந்தப் போட்டிக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் அலுவலகம் சென்று தெரிந்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 
இந்தக் கடிதத்தை, கடித அட்டை அல்லது வெள்ளை காகிதத்தில் எழுதி அஞ்சல் உறையிட்டு, அஞ்சல் தலையுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, அஞ்சல் தலை ஆகியவற்றை அஞ்சல் துறையே வழங்க உள்ளது.
 
இந்தப் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதி அனைத்து மண்டலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்