மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று இந்தூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ''வரும் 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து மாதம் 5 கிலோ ரேசன் பொருட்கள் இலவசமாக அளிப்போம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ரூ.450க்கு வழங்குவோம்'' என்று தெரிவித்துள்ளார்.