சிறுவயதில் இருந்தே பக்தி: கிருஷ்ணர் சிலையை மணந்த சட்டக்கல்லூரி மாணவி!

சனி, 18 மார்ச் 2023 (19:42 IST)
சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் மீது பக்தி கொண்ட சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் ம் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரக்சா என்ற முப்பது வயது சட்டக்கல்லூரி மாணவி சிறு வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணர் மீது அதே அன்பு கொண்டிருந்தார். இந்த நிலையில் திருமணம் செய்தால் கிருஷ்ணரை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்று கூறிக் கொண்டிருந்த அவர் பெற்றோர் சம்மதத்துடன் மதுரா சென்று கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்டார். 
 
கிருஷ்ணர் அடிக்கடி தனது கனவில் வந்து மாலை அணிவிப்பார் என்றும் அவரையே கணவராக கருதி வாழ்ந்து வருவதாகவும் அவர் பலமுறை கூறியிருக்கிறார். இதனை அடுத்து அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோர் அவரை கிருஷ்ணர் சிலைக்கு திருமணம் செய்து வைத்தனர்
 
இந்த திருமண விழா மதுராவில் விசேஷமாக நடந்ததை அடுத்து உற்றார் உறவினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்