காதல் திருமணங்களுக்கு பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயம்: எம்.எல்.ஏகள் கோரிக்கை

வெள்ளி, 17 மார்ச் 2023 (17:12 IST)
காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயம் ஆக்க வேண்டும் என குஜராத் சட்டசபையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனிமேல் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக வேண்டும் என குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கும் திருமணங்களே பல குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்றும் அதனால் காதல் திருமணங்களுக்கு பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக வேண்டும் என்றும் இதன் மூலம் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் என்றும் குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்