இதற்கென மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த செல்போன் டவர் செயல்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், டெலிகாம் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில், இவர்களின் வீட்டின் மாடியில் சென்று செல்போன் டவரை பார்க்கச் ச்என்ரார். ஆனால், அங்கு டெலிபோன் டவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் புகாரளித்தார்.
கடந்த 6 ஆண்டுகளாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தராததாலும், அது துருப்பிடித்திருந்ததாலும்,அவற்றைப் பிரித்து, வீட்டின் உரிமையாளர்கள் பழை இரும்புக் கடையில் எடைக்குப் போட்டதாக தெரிகிறது.