ஞாயிறு தோறும் பஸ் ஓட்டும் சட்டக்கல்லூரி மாணவி!

செவ்வாய், 26 ஜூலை 2022 (20:46 IST)
ஞாயிறு தோறும் பஸ் ஓட்டும் சட்டக்கல்லூரி மாணவி!
சட்ட கல்லூரி மாணவி ஒருவர் ஞாயிறு தோறும் பேருந்து ஓட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
கேரள மாநிலத்திலுள்ள கொச்சி என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவி அன்மேரி.  இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் ஊதியம் ஏதும் வாங்காமல் பேருந்தை ஓட்டி வருகிறார். 
 
முதலில் பேருந்தை ஓட்டியதை பார்த்து பலர் அச்சத்துடன் பார்த்தனர் என்றும் நான் விபத்தை ஏற்படுத்தி விடுவேன் என அச்சப்பட்டனர் என்றும் கூறினார். ஆனால் இப்போது என்னை ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரூட்டில் சகஜமாக பார்க்கின்றனர் என்று அன் மேரி கூறியுள்ளார் 
 
மேலும் ஒவ்வொரு நாளும் பேருந்தை நான்தான் முதலாளியின் வீட்டிற்கு பேருந்தை ஓட்டிச் செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து ஓட்டுவது தனக்கு மிகவும் விருப்பமானது என்றும் பேருந்து மட்டுமின்றி கனரக வாகனங்களை ஓட்ட என்னால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்