
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நாளை பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இன்று முதலே திருப்பதியில் கூடி வருகின்றனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதமிருந்து, சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மக்கள் பலரிடமும் வழக்கமாக உள்ளது. அவ்வாறாக விரதமிருக்கும் பலரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய செல்கின்றனர்.
அவ்வாறாக நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் இன்று முதலே திருப்பதியில் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காம்ப்ளக்ஸின் 31 அறைகளும் முழுவதுமாக நிரம்பிவிட்ட நிலையில், வெளியே 3 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை இந்த கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது.
Edit by Prasanth.K