ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படாது - யோகி

சனி, 9 அக்டோபர் 2021 (13:03 IST)
ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு. 
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தினால் 8 பேர் உயிரிழந்தனர்.
 
இதனைத்தொடர்ந்து லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 
லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை. 
 
ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. ஆதாரம் இருந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்