இங்கெல்லாம் நீங்க வரக்கூடாது! – ராகுல்காந்திக்கு அனுமதி மறுத்த யோகி!

புதன், 6 அக்டோபர் 2021 (08:46 IST)
உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொள்ளப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாநில முதல்வர்கள் உ.பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் செல்ல ராகுல் காந்தி அனுமதி கேட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் அனுப்பிய சில மணி நேரங்களில் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்