மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை

சனி, 9 ஜூன் 2018 (12:42 IST)
வெற்றி பெற்று மெடல்கள் வாங்கும் வீர்ர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அரசுகள் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அதே நேரத்தில் வளரும் விளையாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச நிதியுதவிகளை கூட அரசு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியாசிங் என்பவர் தேர்வு பெற்றுள்ளார். ஆனால் இவர் ஜெர்மனிக்கு செல்ல அரசு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.
 
இருப்பினும் மனம் தளராத பிரியாசிங் தந்தை, தான் பிரியமாக வளர்த்து வந்த மாட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மகளை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார். திறமை உள்ளவர்கள் மெடல் பெற்று வரும்போது நிதியை வாரி வழங்கும் அரசு, திறமையை நிரூபிக்க காத்திருப்பவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்