மனைவி கொடுமை தாங்க முடியவில்லை.. ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..!

Siva

புதன், 8 அக்டோபர் 2025 (10:58 IST)
கர்நாடகாவில், தனது மனைவி மற்றும் அவரது உறவினர்களால் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, சால்மன் பாஷா என்ற கணவர் ஃபேஸ்புக் நேரலையின்போதே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குவைத்தில் வேலை பார்த்துவிட்டு திரும்பிய சால்மன், தனது மனைவி நிகத் ஃபிர்தோஸ், அவரது குடும்பத்தினர் மற்றும் AIMIM கட்சியை சேர்ந்த உறவினர் புர்ஹான் உத்தீன் ஆகியோர் தன்னை பணத்திற்காக வற்புறுத்தி துன்புறுத்துவதாக லைவ் வீடியோவில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 
 
மேலும், தனது மனைவிக்கு உறவினர் ஒருவருடன் முறையற்ற உறவு இருப்பதாகவும், குழந்தைகளை பார்க்க அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கு எதிராக பொய்ப்புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சால்மன் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் நியாயமான விசாரணை கோரி புகார் அளித்துள்ளனர்.
 
இந்தக் குற்றச்சாட்டுகளை சால்மனின் மனைவி நிகத் ஃபிர்தோஸ் முற்றிலும் மறுத்துள்ளார். "இது அனுதாபத்தை தேடும் நாடகம்" என்றும், அவர் ஏற்கனவே தன்னை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியதாகவும் அவர் பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளார். இரு தரப்பின் வாக்குமூலங்களை சரிபார்த்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்