மாமியாரின் கைவிரலை கடித்து துப்பிய மருமகன்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி..!

Siva

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (07:54 IST)
நெல்லை அருகே துரைராஜ் என்பவர் தனது மாமியார் பேச்சியம்மாளின் கைவிரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜுக்கும் பேச்சியம்மாளின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறால், கடந்த சில மாதங்களாக துரைராஜின் மனைவி தனது அம்மா வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
 
இந்நிலையில், தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்த துரைராஜ், மாமியார் மற்றும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த துரைராஜ் மாமியாரின் கையை பிடித்து இழுத்து, அவரது கைவிரலை கடித்து துண்டாக்கி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பேச்சியம்மாள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இச்சம்பவம் குறித்து, பேச்சியம்மாளின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்