400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய குர்மித் சிங் - ஏன் தெரியுமா?

புதன், 30 ஆகஸ்ட் 2017 (15:29 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் குர்மித் சிங் பற்றி பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது.


 

 
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்குகளில்  குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில், தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள பெண்களை, தன்னுடைய சீடர்கள் எவரும் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காக, அவர்கள் ஆண்மையை குர்மித் சிங் நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது. தனது பெண் சீடர்களை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற வக்கிரபுத்தியில் அவர் இந்த கொடுமையை தொடர்ந்து செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
அதில் பாதிக்கப்பட்ட அவரின் சீடர்களின் ஒருவரான ஹன்ஸ்ராஜ் தற்போது அதுபற்றி வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், 13 வயதில் குர்மித் ஆசிரமத்தில் தான் சேர்ந்ததாகவும், 2000ம் ஆண்டு, தனக்கு 19 வயது இருக்கும் போது தேரா மருத்துவமனையில் தன்னுடைய விதைப்பை நீக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். 
 
விதைப்பைகளை நீக்கினால் கடவுளுக்கு நெருக்கமாகலாம் எனக் கூறி தன்னுடைய ஆண் சீடர்களை ஏமாற்றி வந்துள்ளார் குர்மித் சிங். அதேபோல், பல பெண்களை மூளை சலவை செய்து அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார் எனவும், பயம் காரணமாக அவர்கள் யாரும் அதை வெளியே கூறவில்லை எனவும் ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்