கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை செய்து வருகிறது. அதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளதால் சூழப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 11 பேர் உயிழந்துள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில், அவர் ஹெலிகாப்டரில் செல்லும் போது செய்திதாள் படிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒருவர் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க செல்லும் சிறந்த ஆய்வு இது. நியூஸ் பேப்பர் படிக்கும் ஏன் முதல்வர் ஆய்வுக்கு செல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை” என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.