டெல்லிக்குப் புறப்படும் கிரண் பேடி… அதற்கு முன்னர் ஜக்கியுடன் சந்திப்பு!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:19 IST)
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இன்று டெல்லிக்கு புறப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனிடையே புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன். தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது என கூறியிருந்தார். 

இந்நிலையில் அவர் இன்று பாண்டிச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று அங்கு ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ்வை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு செல்ல உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்