ஆட்சியை தக்கவைக்குமா நாராயணசாமி அரசு!? – இன்று அவசர ஆலோசனை!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (08:55 IST)
புதுச்சேரியில் நாராயணசாமியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகிய நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாளை நாராயணசாமிக்கு அவகாசம் அளித்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்