புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் - ஜெயகுமார் பேட்டி!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (12:01 IST)
மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் என அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை. 

 
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் இடம் 13 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 
இதனிடையே அமைச்ச்ர ஜெயகுமார், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது முதன்முதலில் வெற்றியை பதிவுசெய்த மாநிலம் புதுச்சேரி. அதனால் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும். அதிமுக அங்கு அரசு அமைக்கும். 7 பேர் விடுதலை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவில் சசிகலாவுக்கு உரிமையில்லை என தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்