கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, ராஜஸ்தானின் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ், கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து கேரளாவில் நிலச்சரிவுகள், வெள்ளம், நிலநடுக்கம் அதிகரித்துள்ளது என்று கூறினார். இதற்கெல்லாம் பசு வதைதான் காரணம் என்று தெரிவித்தார்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுகிறது என்றும் ஆனால் அங்கெல்லாம் பாதிப்பு பெரிதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வயநாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.