நாம் தமிழர் என்ற கட்சியின் நிர்வாகிகளின் வீட்டில் கடந்த 2 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜாராகினர்.
தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 2 ஆம் தேதி , நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு மடிக்கணிணி, 7 செல்போன், 8 சிம்கார்டுகள், 4 பென்டிரைவ்கள் , விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் சட்டவிரோதமான புத்தகங்கள் உள்ளிட்டவரை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியிருந்தனர்.