உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள உணவு நிறுவனங்களில் முக்கியமானது கேஎப்சி நிறுவனம். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கேஎப்சி கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது. அதற்கு பீட்ஸா ஹட் நிறுவனமும் ஆதரவு தெரிவித்து காஷ்மீர் ஒற்றுமை தினம் என பதிவிட்டிருந்தது.
இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கேஎப்சி, பீட்ஸா ஹட்டை புறக்கணிக்க வேண்டும் என ட்ரெண்டிங் வைரலானது. அதை தொடர்ந்து மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ள கேஎப்சி “சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்து மன்னிக்கக் கூடியது அல்ல. அதை ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நாங்கள் மீண்டும் பெருமையோடு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.