கடந்த சில வாரங்களாக சபரிமலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் என்பவர் சபரிமலைக்கு செல்லும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கேரளாவின் லபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்ட கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா கோவிலின் தலைமை அர்ச்சகர் டி மாதவன் நம்பூதிரி என்பவர் தேவஸ்தான அமைச்சரை தனது ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டதால் ஒரு விவாத பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.