கேரள பள்ளி மாணவி ஒருவருக்கு கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து வீடியோ வகுப்பு எடுத்த ஆசாமியை போலீஸார் கையும், கஞ்சாவுமாக பிடித்துள்ளனர்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரள மாவட்டம் திருச்சூரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து பதிவிட்ட மட்டான்சேரியை சேர்ந்த பிரான்சிஸ் அகஸ்டின் என்ற நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியை சொல்லி அங்கு சென்றால் கஞ்சா கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் கஞ்சாவை வாங்கி எப்படி பயன்படுத்த வேண்டும் என செய்து காட்டி வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சைக்குள்ளான நிலையில் பதிவிட்ட பிரான்சிஸ் அகஸ்டினை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள், கஞ்சா விற்பனையாளர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.